மூவரில் நான் மட்டுமே உயிர் பிழைத்தேன்!(வீடியோ)

0
367

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் தான் மட்டுமே உயிர் பிழைத்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்துள்ளார்.

காலம் சென்ற சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அமரர் கௌரி சங்கரி தவராசாவின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் யாழில் அண்மையில் அனுஷ்டிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 40 கால வரலாற்றை ஒரே வருடத்திற்குள் முடித்து விட வேண்டும் என்பதற்காக நான் இரவு, பகலாக எழுதினேன்.

எனது துணைவிக்கு நான் செய்ய வேண்டிய ஒரு மாபெரும் கடமையாக அதை நான் கருதினேன். நானும் எனது மனைவியும் ஒரே நாளில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம்.

அதேவேளையிலே எங்களுக்கு உற்ற துணையாக இருந்த எங்களுடைய நண்பர், நண்பர் அல்ல என் உடன் பிறப்பு விக்னேஸ்வரன் அவரும் எங்களுடன் வந்த நிலையில் மூன்று பேருமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோம். இந்த நிலையில் 23ஆம் திகதி என்னுடைய துணைவியார் காலமானார்.

அந்த வேதனையில் நான் துடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வலியை வசனங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. 26ஆம் திகதி ஒரு செய்தி வந்தது எனக்கு விக்கி என்ற விக்னேஸ்வரனும் இறந்து விட்டார் என்று என சுட்டிக்காட்டியுள்ளார்.