நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்; பரபரப்பை ஏற்படுத்திய வாக்னர் தலைவர் வீடியோ

0
210

விமான விபத்தில் இறந்ததாக கருதப்பட்ட ரஷ்ய கூலிப்படை வாக்னர் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின், இறப்பதற்கு முன் காரில் சென்றபடி பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில், அவர் நான் தற்போது ஆப்பிரிக்காவில் இருக்கிறேன். நான் நலமாக இருக்கிறேன். இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என கூறுகின்றார்.

Wagner Grop

புடின் – வாக்னர் தலைவர் கருத்து வேறுபாடு 

ரஷ்ய – உக்ரைன் போரில் வாக்னர்படை முக்கிய பங்காற்றி வந்த நிலையில் கடந்ந 2 மாதங்களுக்கு முன்பு வாக்னர் குழு தலைவருக்கும், ரஷிய ஜனாதிபதி புதினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

வாக்னர் படையினர் மாஸ்கோவில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து யெவ்கெனி பிரிகோஷின் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதனால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

எனினும் பின்னர் 2 நாளில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் வாக்னர் குழுவினருக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷ்யா அறிவித்தது.

அதன் பின்பு ஆகஸ்ட் 23 அன்று விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் உள்ளிட்ட 10 பேர் உயிர் இழந்ததாக கூறப்பட்ட நிலையில் ரஷ்யாவின் சதி செயலால் அவர் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்னர் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின், இறப்பதற்கு முன் பேசிய காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.