யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணமோசடி வழக்கு ஒன்றில் விளக்கமறியலில் சிறையில் இருக்கும் சந்தேக நபரின் மனைவியுடன் அந்த வழக்கில் வாதாடிய சட்டத்தரணி ஒருவர் தங்கிய சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பணமோசடி வழக்கு ஒன்றில் பெண்னின் கணவன் விளக்கம்றியலில் உள்ள நிலையில் சந்தேகநபருக்காக வாதாடிய சட்டத்தரணி, கைதியின் மனைவியும் விடுதி அறையில் நிறை வெறியில் இரவிரவாகக் கூத்தடித்ததாக அந்த விடுதியின் பணியாளர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சட்டத்தரணி தனது காரில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை கூட்டி வந்து விடுதி அறையில் இவ்வாறு கூத்தடித்துள்ளார். இந்நிலையில் குறித்த பெண் நள்ளிரவின் பின் அறைக்குள் தொடர்ச்சியாக வாந்தி எடுத்த நிலையில் பெண்ணை அங்கேயே விட்டு விட்டு அதிகாலை சட்டத்தரணி தனது காரில் எஸ்கேப் ஆகிவிட்டதாகத் தெரியவருகின்றது.

இந்நிலையில் அறையில் அரை குறை மயக்கத்தில் இருந்த பெண்ணை மீட்ட பணியாளர்கள் பெண்னிடம் விசாரித்த போதே தான் விளக்கமறியலில் இருக்கும் ஒருவனின் மனைவி என கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வழக்காளியுடன் சமரசப் பேச்சுக்கள் நடத்த சட்டத்தரணி தன்னை கூட்டி வந்ததாகவும் ஆனால் வழக்காளி சட்டத்தரணியை சந்திக்க மறுத்ததால் நேரம் ஆகிவிட்டது என கூறி தன்னை விடுதியில் தங்க வைத்ததாகவும் பெண் கூறினாராம்.
அதோடு குளிர்பானம் என கூறி மதுபானத்தை தனக்கு கொடுத்து மயக்கிவிட்டதாகவும் பெண் விடுதி பணியாளர்களிடம் கூறியுள்ளாராம்.