ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு தாரைவார்க்கப்பட்ட பெருந்தொகை பணம்

0
37

முந்தைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட பதினான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியன் ரூபாய்க்கும்  அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் 2024ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக மட்டும் 110 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டபய ராஜபக்ச காலத்தில் ஆறு ஆளும் கட்சி அமைப்பாளர்களுக்காக 370 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.