இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்பவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளை வென்று கொடுத்ததுடன், பல சாதனைகளையும் படைத்தவர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். தோனி அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து காரில் ஜாலியாக ஊரையும் சுற்றி வருகிறார்.
அந்த வகையில் ராஞ்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு நின்றிருந்த இளைஞர்களிடம் ‘இந்த வழி எங்கே இருக்கிறது’ என்று கேட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஆச்சர்யத்தில் திளைத்த அந்த இளைஞர்களும் தோனிக்கு சரியான வழியைச் சொல்லி அனுப்புகிறார்கள். பின்னர் அந்த இளைஞர்களுக்கு கை கொடுத்த தோனி அவர்களுடன் புகைப்படமும் எடுத்து கொண்டார்.