இணைய கேபிள்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஹூதி கிளர்ச்சியாளர்கள்.. இலங்கையிலும் தாக்கம் ஏற்படலாமென தகவல்

0
144

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்களை ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் சேதப்படுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவூதி அரேபியாவிற்கும் ஜிபூட்டிக்கும் இடையிலான செங்கடலில் பல தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம்

கடலுக்கடியில் உள்ள இணைய கேபிள்கள் சேதமடைவதால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான தகவல் தொடர்பு தடைப்படும் அபாயம் ஏற்படக்கூடும்.

இந்நிலைமையால், ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான தொடர்பாடல் செயற்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கையிலும் இணைய சேவைகள் மற்றும் தொடர்பாடல் நடவடிக்கைகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.