இலங்கையில் பயங்கரம்; 71 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

0
19

மினுவாங்கொடை – யட்டியன பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று (24) 71 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு முகத்தில் மிளகாய்த் தூள் தூவி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அந்தப் பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்யப்பட்ட இந்தப் பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று (24) அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மிளகாய்த் தூள் முகத்தில் பூசப்பட்டு கீழே விழுந்து கிடந்ததைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

மினுவாங்கொடை பதில் நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கம்பஹா சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்புமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.