உலகப் புகழ் பெற்ற தஞ்சை கோவிலில் சாமி தரிசனம் செய்த ஹாலிவுட் நடிகர்

0
167

ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் மைக்கல் டக்ளஸ். ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை பெற்றவர்.

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற 54வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு ‘சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது.

Michael Douglas

விருதை வாங்குவதற்காக இந்தியா வந்த மைக்கேல் தற்போது தனது குடும்பத்தினருடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வந்தவர் நேற்று தஞ்சை பெரிய கோவிலுக்கு தனது மனைவி, மகனுடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார். கோவிலை சுற்றிப் பார்த்த அவர் அதன் பிரம்மாண்டத்தையும் ராஜ கோபுரத்தையும் பார்த்து வியந்தார்.