ஹமாஸ் தலைவரின் வீடு முற்றுகை; சுரங்கங்களுக்குள் மறைவு; இஸ்ரேல் தகவல்

0
183

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹ்யா சின்வாரின் வீட்டை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர் என பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ள அதேவேளை அவர் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கியிருக்கின்றார் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் ஹமாஸ் தலைவரின் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர் அவரால் தப்பிச்செல்ல முடியும் ஆனால் நாங்கள் அவரை கைப்பற்றுவதற்கு வெகுநாட்கள் எடுக்காது என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீடு சுற்றிவளைப்பு; சுரங்கப்பாதைகளுக்குள் மறைவு; இஸ்ரேல் தகவல் | Surrounded House Leade Hamas Inside Tunnels Israel

அர்த்தம் ஹமாஸ் தலைவரை இஸ்ரேலிய படையினர் நெருங்கி விட்டனர் என்பதா என்ற கேள்விக்கு அவரது வீடு கான்யூனிஸ் பகுதியிலேயே உள்ளது என இஸ்ரேலிய படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் தரைக்குமேலே இல்லை நிலத்திற்கு கீழே இருக்கின்றார். இஸ்ரேலிய படையினரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார் அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த மேலதிக விபரங்களை நாங்கள் வெளியிடப்போவதில்லை.

புலனாய்வு அடிப்படையில் எங்களிற்கு கிடைத்துள்ள தகவல்களையும் நாங்கள் வெளியிடப்போவதில்லை அவரை கண்டுபிடித்து கொல்வதே எங்கள் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவரின் வீடு சுற்றிவளைப்பு; சுரங்கப்பாதைகளுக்குள் மறைவு; இஸ்ரேல் தகவல் | Surrounded House Leade Hamas Inside Tunnels Israel