தனது எச்சிலை துப்பி வாடிக்கையாளர் ஒருவரின் முகத்தை மசாஜ் செய்த முடி திருத்தும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 11ஆம் திகதி இந்தியாவின் லக்னோவில் பதிவாகியுள்ளதுடன் குறித்த நபரின் செயல் சிசிடி கெமராவிலும் பதிவாகியுள்ளது.
உன்னாவோவில் வசிக்கும் நபர், மசாஜ் செய்வதற்காக சலூனுக்குச் சென்றார். இதன்போது முடித்திருத்தும் பணியில் இருந்த நபர் தனது எச்சிலை துப்பி பாதிக்கப்பட்ட நபரின் முகத்தை மசாஜ் செய்துள்ளார்.
எனினும், இதனை பாதிக்கப்பட்டவர் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் முடி திருத்தும் பணியில் இருந்த நபரின் செயலில் சந்தேகமடைந்த பாதிக்கப்பட்டவர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியை சோதனை செய்து பார்த்துள்ளார்.
இதன்போது, முடி திருத்தும் நபர் தனது கையில் எச்சிலை துப்பி முகத்தை மசாஜ் செய்ததை பார்த்த அவர் அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து வாடிக்கையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் லக்னோ பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.