இலங்கையின் மோசமான தோல்வி குறித்து குசல் மெண்டிஸ் தகவல்!

0
218

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி மோசமான தோல்விகளை சந்தித்தது,

இவ்வாறான நிலையில், தொடர் தோல்விகள் குறித்து இலங்கை அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,

ஒரு அணியாக சிறந்த முறையில் விளையாடிய போதிலும், துரதிஷ்டவசமாக போட்டிகளில் தோல்வியடைந்ததாக இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்காக தான் மிகவும் வருந்துகிறேன் என அவர் தெரிவித்தார். எம்மால் சிறப்பாக நிறைவு செய்ய முடியவில்லை. அதைத் தவிர, எனக்கு சொல்ல எதுவும் இல்லை.

“எமது ஆரம்பம் சிறப்பாக இருந்தது, ​​ போட்டியில் தோல்வியடையும் போது, ​​ என்ன செய்ய முடியும் என்று பார்த்தோம், ஒரு அணியாக எங்களால் முடிந்ததைச் செய்ய எதிர்பார்த்தோம்.”

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இலங்கையின் மோசமான தோல்வி : குசல் மெண்டிஸ் கூறிய தகவல்! | Sri Lanka Defeat In World Cup Cricket Kusal Mendis

“அணியில் ஒற்றுமை இல்லை என்பதை நான் ஏற்க மாட்டேன். அனைவரும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றுதான் எதிர்பார்த்தனர்.”

“எனக்கு அணியில் இருந்து நிறைய ஆதரவு கிடைத்தது. போட்டிகளில் வெற்றி தோல்வியை கட்டுப்படுத்துவது கடினம். இனி வரும் தொடர்களை பார்த்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.