பாடசாலையில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள்..

0
231

மாத்தறையில் உள்ள பாடசாலை ஒன்றில் நிர்மாணிக்கப்பட்டிருந்த அறை ஒன்றின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை – மெத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றிலிருந்தே குறித்த வெடிபொருட்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலையின் குறித்த அறை பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அங்கிருந்து டி56 தோட்டாக்கள் 20ம், மிமீ 3.2 தோட்டாக்கள் 24ம், மி.மீ. 9 தோட்டாக்கள் 107 ம் மற்றும் கல்கடஸ் வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

பாடசாலை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருட்கள்! பரபரப்பு சம்பவம் | Gun And Bullets Hidden In The School Roof Matara

மேலும், தொடர்ந்து மேற்கொண்ட தேடுதலின் போது, ​​TNT என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.