நடிகர் விஜய்யின் ஜனநாயகனுக்கு காங்கிரஸ்சில் பெருகும் ஆதரவு!

0
30

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் பட வெளியீடு பிற்போடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தீர்ப்பு நாளை காலை வழங்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் இருந்து நடிகர் விஜய்க்கு ஆதரவு பெருகிவருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மூத்த நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி, எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி ஆகியோர் ‘ஜனநாயகன்’ பட தணிக்கை விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இதை வைத்து பார்க்கும்போது சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணையுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

இந்த மாத இறுதியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் வர இருக்கின்றனர். அந்த நேரத்தில் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி இறுதி முடிவு எடுக்கும் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.