தமிழ் பொது வேட்பாளருக்கு பெருகும் ஆதரவு: கிளிநொச்சியில் மாபெரும் வரவேற்பு

0
143

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் கிளிநொச்சி மாவட்டத்தில் தனது பரப்புரையை இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பரப்பரைக் குழு பொது வேட்பாளரை இத்தாவில் சந்தியிலிருந்து கலை நிகழ்வுகளோடு வரவேற்று அழைத்துச் சென்றது. பளை பேருந்து நிலையத்தில் வரவேற்பு நடனமும் உரைகளும் இடம் பெற்றன. தொடர்ந்து ஆனையிறவு, இயக்கச்சி ஆகிய இடங்களில் வரவேற்பு நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

Oruvan