வரதட்சணையாக கிரீன்லாந்து; ட்ரம்ப் மகன் – டென்மார்க் இளவரசி திருமணம் நடந்தால்

0
65

டென்மார்க்கின் இளவரசியை அமெரிக்க ஜளாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மகன் திருமணம் செய்துகொண்டால் வரதட்சணையாக கிரீன்லாந்து கொடுக்கப்படுமா என்ற பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

கிரீன்லாந்தை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் டென்மார்க்கின் இளவரசியான இசபெல்லாவை ட்ரம்ப்பின் மகன் பாரன் ட்ரம்ப் மணமுடிக்க வேண்டும் என்று பயனர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

இசபெல்லாவை திருமணம் செய்தால், அமெரிக்காவுக்கு வரதட்சிணையாக கிரீன்லாந்து அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இசபெல்லா – பாரன் ட்ரம்ப் இருவரின் படங்களையும் ஒன்றாகச் சித்திரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டும் உள்ளார்.

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நீண்டகாலமாகவே முயற்சித்து வருகிறார். இதனிடையே கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ள அந்தத் தீவின் மீது படையெடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.