தென்னிந்திய பிரபல நடிகை சிம்ரனின் தலைமையில் விருது வழங்கல் மற்றும் பட்டமளிப்பு விழா கம்பஹாவில் இடம்பெற்றது. கம்பஹா பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்தியத் திரையுலக நட்சத்திரம் சிம்ரன் கலந்து கொண்டார்.
நிகழ்வின் முதல் அம்சமாக மணப்பெண் அலங்கார போட்டி இடம்பெற்றது. நிகழ்வில் முடிவில் பிரபல தென்னிந்திய தமிழ் நட்சத்திரம் சிம்ரனினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

