EPF வட்டியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை

0
154

ஊழியர் சேமலாப நிதியத்திற்காக வழங்கப்படும் வட்டி விகிதத்தை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“ஊழியர் சேமலாப நிதியம் நம் நாட்டில் மிகப்பெரிய நிதியமாகும், 27 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். 2023ம் ஆண்டுக்காக ஊழியர் சேமலாப நிதியம் ஊடாக முதலீடு செய்து ஈட்டிய பணத்தில் 9 சதவீதத்திற்கு பதிலாக 13 சதவீதத்தை வட்டியாக செலுத்த தயாராக உள்ளோம்.

குறைந்தபட்ச தொகையாக 9 சதவீத வட்டியை வழங்க முடியுமாக இருந்தது. ஆனால் அரசாங்கம் 13 சதவீதத்தை செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும், அதன் உறுப்பினர்களுக்கும் இது வெற்றியாகும். இந்த நிதியை முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தின் நியாயமான பகுதி உறுப்பினர்களுக்கு செல்கிறது” என்றார்.