மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் ஆளுநர் லலித் யூ கமகே அறிவுறுத்தல்

0
346

மத்திய மாகாணத்தில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு முன்னுரிமையளிக்குமாறு மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மரம் முறிந்து விழுந்ததில் பதிவான உயிரிழப்புகள்

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்தனர்.

இந்த நிலையிலேயே மத்திய மாகாண ஆளுநர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

அத்துடன் அவ்வாறான ஆபத்து நிறைந்த மரங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும், அது குறித்த தகவல்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண ஆளுநர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.