இலங்கை அரசாங்கம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை (Wasantha Mudalige) கொலை செய்ய முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakhman Kiriella) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (03-10-2022) உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகேவை இரவு நேரங்களில் விசாரணைகளுக்காக சிறைச்சாலையிலிருந்து அழைத்து செல்லப்படுகின்றார்.

அழைத்துச்செல்லும் போது தப்பிச் செல்ல முயற்சித்ததாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கும். அவரை தடுப்பதற்காக காவல் துறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தார் எனவும் பின்னர் அறிவிக்கப்படும்.
ஆகையினால் விசாரணைகளை இரவு வேளைகளில் அல்லாது பகலில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.