அரசன் போன்று மக்களின் குறைகளை அறிய தெருவுக்கு வந்த கோட்டபாய

0
650

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி அவரது அலுவலத்திற்கு முன்னாள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டபாய போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபல்யம் அடைந்துள்ளது.

சாதாரண குடும்பஸ்தர் போன்று ஒருவர் பொருட்களை வாங்க வரிசையில் காணப்படுகிறார்.

அதனை கோட்டபாய என சுட்டிக்காட்டும் சமூகவலைத்தளவாசிகள், மன்னர்கள் போன்று மக்களின் மனநிலையை அறிய மாறுவேடத்தில் ஜனாதிபதி வந்துள்ளதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.  

உண்மையில் இந்தப் புகைப்படம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அல்ல. அவர் போன்று தோற்றமுடைய பொது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.