போர்க்குற்றங்களுக்கு கோட்டாபய பொறுப்புக் கூறமாட்டார்; ஜஸ்மின் சூக்கா

0
200

இலங்கை அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரதூரமான மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது, ஜேவிபி காலத்தில் கோட்டாபய ராஜபக்ச மாத்தளைக்கு பொறுப்பாக காணப்பட்ட காலம் வரை நீள்கின்றது என்பதை மனிதப் புதைக்குழிகள் குறித்த புதிய அறிக்கை வெளிப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

போர் குற்றம்

போர்க்குற்றங்களுக்கு கோட்டாபய ஒருபோதும் பொறுப்புக் கூறமாட்டார் - ஜஸ்மின் சூக்கா | Gotabaya Will Not Responsible War Crime Sri Lanka

அன்று தொடக்கம் இன்று வரை ஜேவிபி காலத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது யுத்தத்தில் இறுதியில் போர் குற்றத்தில் ஈடுபட்டவர்களோ பொறுப்பு கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இடம் பெற்ற சம்பவங்களிற்காகவோ அல்லது யுத்தம் முடிவில் இடம்பெற்ற சம்பவங்களிற்காகவோ இந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்சவை பொறுப்பு கூறச் செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதன் இருப்பிற்காகவும் ஆதரவிற்காகவும் கோட்டாபய ராஜபக்சவிற்கு கடமைப்பட்டிருப்பது இதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.