முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்காக ஆஜராகவுள்ளார்.
ஏற்கனவே கோட்டாபய ராஜபக்க்ஷவை விசாரணைக்காக ஆணைக்குழு அழைத்திருந்தபோதும் சிங்கப்பூர் செல்வதால் தம்மால் வரமுடியாதென கோட்டாபய எழுத்து மூலம் அறிவித்திருந்தார். இந்நிலையில் 17 ஆம் திகதி ஆஜராகும் கோட்டபாயவிடம் சாட்சியம் பதிவு செய்யப்படுமென தெரிவிக்கப்படுகிறது.



