இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேற்றைய தினம் உயர் நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது. அரகலய போராட்டத்தின் போது நாடளாவிய ரீதியில் அவசர சட்ட ஒழுங்குகளை அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய இந்த காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றையதினம் (10-05-2023) முதல் 8 வாரங்களுக்குள் உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.