இலங்கையின் மாத்தலாவில் 1989 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான அரசாங்க விசாரணையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

இதன்போது குறித்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அப்போது குறைந்தது 700 பேர் – முக்கியமாக சிங்களவர்கள் – அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது, ஜேவிபி என்ற மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறைக் காலகட்டமாகும் என்றும் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.