கோட்டா விலகல்; பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்கும் ரணிலின் உறவினர்!

0
856

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில் வெற்றிடமாகும் ரணிலின் தேசிய பட்டியல் இடத்திற்கு ஐ.தே.கவின் பிரதி தலைவரும் ரணில் விக்கிரமசிங்கவின் உறவினருமான ருவான் விஜேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.