தவறு செய்துவிட்டேன்: கிரிக்கெட் வீரர் டில்ஷான் தமது முடிவு குறித்து தகவல்

0
105

2019ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதபதி கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க பொதுஜன பெரமுனவில் இணைந்திருந்த இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான், அத்தகையதோர் முடிவு எடுக்கப்பட்டமை தவறானதென பின்னர் உணர்ந்ததாக தெரிவித்தார்.

திலகரத்ன டில்ஷான், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியமை குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு தனித்துவமான பணியை செய்வார் என்ற நம்பிக்கையின் காரணமாகவே அவருக்கு ஆதரவளித்தேன். ஆனால், அவரால் அதனை செய்ய முடியாதென பின்னர் உணர்ந்து உடனடியாக அவரது அரசியல் முகாமை விட்டு வெளியேறினேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.