இலங்கையில் முதன்முறையாக ரயிலில் கொண்டு செல்லப்படும் பொருள்!

0
157

இலங்கையில் முதன் முறையாக பொதி செய்யப்பட்ட குப்பைகளை ரயிலில் கொண்டு செல்லும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்றையதினம் (25-08-2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வனவாசலை குப்பை பொதி செய்யும் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், புத்தளம் அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

756 இல இன்ஜினை கொண்ட புகையிரதத்தில் 20 கொள்கலன்களில் இந்த குப்பைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. குப்பைகளை ஏற்றிய கொள்கலன்கள் வனவாசலையில் இருந்து புத்தளம் வரை சென்று அங்கிருந்து அருவக்காடு குப்பை மேட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நூர் நகர் ரயில் நிலையம் அருகே நேற்று மற்றும் இன்று பிற்பகல் இந்த குப்பைகளை புகையிரதத்தில் கொண்டு செல்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.