இலங்கை பாடகி யொஹானிக்கு துபாயில் கோல்டன் விசா

0
249

இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா துபாயில் கோல்டன் விசாவினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருதாக ‘கோல்டன் விசா’ கருதப்படுகின்றது.

பாடகி யொஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான பாடல்களால் பார்வையாளர்களை கவர்ந்து வந்தார்.

இவர் இலங்கையில் மாத்திரமின்றி பல வெளிநாடுகளுக்கும் சென்று பாடல்களை பாடியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.