தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) அதன் வெளியீட்டு நாளான வியாழன் (05)அன்று 100 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.
படத்தின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கூற்றுப்படி ஆக்ஷன் – த்ரில்லர் படமான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.126.32 கோடி வசூலித்துள்ளது.
எனினும் செப்டெம்பர் 6 வெள்ளிக்கிழமையன்று அதன் வசூலில் கணிசமான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இண்டஸ்ட்ரி டிராக்கரான Sac ilk படி GOAT இரண்டாவது நாளான நேற்றைய தினம் 24.75 கோடியை வசூலித்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
வியாழன் வசூலில் இருந்து 43 சதவிகித சரிவு ஆகும். அதன் முதல் நாள் வசூல் இந்தியாவில் 44 கோடி ரூபாவாக இருந்தது. தற்சமயம் இரண்டு நாட்களில் படத்தின் மொத்த வசூல் இந்தியாவில் மாத்திரம் 68.75 கோடி ரூபாவாக உள்ளது.
அதேநேரம் GOAT இன் முதல் நாள் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் விஜய்யின் 2023 இல் வெளியான லியோவை விட குறைவாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் கடந்த ஆண்டு முதல் நாளில் ரூ.148.5 கோடி வசூலித்தது.
225 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட லியோ உலகளவில் 618.5 கோடி ரூபாய் வசூலுடன் விஜய்யின் அதிக வசூல் செய்த படமாக உள்ளது.
இந்நிலையில் 380 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள GOAT திரைப்படம் வார இறுதியான இன்றும் நாளையும் பாக்ஸ் ஆபிஸில் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
