சிறைக்கு செல்ல தயாராகுங்கள் – கோட்டாவிற்கு பிரபல நடிகை எச்சரிக்கை

0
409

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை நாற்காலியில் இருந்து எழுந்து சிறைக்கு செல்லுமாறு தான் கூறுவதாக பிரபல சிங்கள நடிகை தீபானி டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் இடம்பெற்ற கட்சி சார்பற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதில் கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சிங்கள நடிகை தீபானி சில்வா

இதேவேளை கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் இரவிரவாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.