மத்திய காசா முனையின் அஸ்-ஸவைடா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக ‘வாஃபா’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்காவின் தலையீட்டுடன் ஒரு “போர் நிறுத்தம்” அறிவிக்கப்பட்ட போதிலும், முற்றுகையிடப்பட்ட அந்தப் பிராந்தியத்தில் பலஸ்தீனியர்களுக்கு எதிரான தனது இனப்படுகொலை யுத்தத்தை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இதில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் தாக்குதல்கள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தடைகளும் உள்ளடங்குவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



