சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள விமான நிலையத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானங்கள் புறப்படுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது.
Dnata என்னும் துபாய் தேசிய விமானப் போக்குவரத்து அமைப்பின் ஊழியர்களான அவர்கள், நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஊதிய பிரச்சனை தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4:00 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டம் காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதங்கள் ஏற்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனீவாவின் காயின்டிரின் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 25% விமானப் போக்குவரத்தை Dnata ஊழியர்கள் கையாள்கின்றனர்.
அதாவது கிட்டத்தட்ட 600 ஊழியர்கள் விமான நிலையத்தில் பணிபுரிகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிகமானோர் பயணம் செய்துவரும் நிலையில் காயின்டிரின் விமான நிலையத்தின் வழியாக ஏறக்குறைய 60,000 பேர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Dnata நிறுவனம் சம்பளத்தை மூன்று சதவிகிதம் உயர்த்த முன்வந்துள்ளது. ஆனால் அது தொழிலாளர்களை திருப்திப்படுத்தவில்லை.