உணவின்றி வாடும் காசா மக்கள்; நடக்கப்போவது என்ன?

0
194

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இரு மாதங்களை கடத்தும் முடிவிற்கு வராத நிலையில் இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காசா மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதிய அளவு உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக காசா மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு கோரி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.