கடும் தாக்குதலால் அதிரும் காசா; 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல்!

0
208

இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருவதுடன் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது எனவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காசா மீது பயங்கர தாக்குதல் நடத்தி ஆயிரம் பேரை இஸ்ரேல் ராணுவம் பிடித்துச் சென்றுள்லதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும் இஸ்ரேல் தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை.

கடும் தாக்குதலால் அதிரும் காசா; 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல் | Israel Heavy Attack Gaza Captured 1000 People

 மிகப்பெரிய சுரங்கப்பாதை

இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் காசாமீது மூர்க்கத்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியதுடன் 1000 பேரை இஸ்ரேல் சிறை பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில்,

ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

கடும் தாக்குதலால் அதிரும் காசா; 1000 பேரை சிறைப்பிடித்த இஸ்ரேல் | Israel Heavy Attack Gaza Captured 1000 People

உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது.

இந்த துரங்கப்பாதை பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ளதுடன் அனைத்து வகை வசதிகளும் கொண்டதாக உள்ளதெனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.