பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று (29) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாதாந்திர சம்பளத்தை கட்சி நிதிக்கு மாற்றி மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உதய கம்மன்பில, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர கொடுப்பனவை தமது விருப்பப்படி செலவிட முடியாது என்று கூறினார்.
அதன்படி 159 ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதத்திற்கு 03 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று அதை கட்சி நிதியில் வரவு வைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பொது நிதியை தவறாக பயன்படுத்தும் செயலாகும் எனவும், இந்த விடயம் குறித்து விசாரணை நடத்த கோரியும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு அளித்துள்ளார்.