இலங்கையின் முன்னேற்றத்திற்கு முழுமையான ஆதரவு: ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி

0
159

இலங்கையின் பொருளாதார செயல் திட்டம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57ஆவது வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஜோர்ஜியா சென்றிருந்த வேளையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என மசாட்சுகு அசகாவா உறுதியளித்துள்ளார்.

இதனிடையே ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவரைச் சந்தித்ததில் தாம் பெருமைகொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தமது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.