தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்; 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை!

0
245

ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ் பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டது. நிலநடுக்கம் எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவே ஐரோப்பில் உள்ள நாடுகளில் எரிமலைகளின் அதிக எண்ணிக்கையாகும்.