இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

0
218

பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மேக்ரோன் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 28 ஆம் திகதி அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ரணிலை சந்திப்பார் என தகவல்

பபுவா நியூகினி நாட்டுக்கான அதிகாரபூர்வ விஜயத்தின் பின்னர் அவர் இலங்கை விஜயம் செய்ய உள்ளார்.

எதிர்வரும் 28ஆம் திகதி இரவு இலங்கையில் தங்கி இருக்கும் நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி | French President To Visit Sri Lanka

முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம்

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முனைப்புகளில் இந்தியா ஜப்பான் உடன் பிரான்சும் இணைந்து உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.