இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டம்!

0
112
rice in a wooden bowl

அரசாங்கத்தினால் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் செயற்றிட்டத்தின் தேசிய நிகழ்வு இன்று நாடுபூராகவும் நடைபெறுகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திலும் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு இலவச அரிசியை மக்களுக்கு வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் த.ஜெயசீலன், உதவிப்பிரதேச செயலாளர், மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் 30,897குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.