30 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி..! நடிகை தமிதாவையும் கணவரையும் சந்தேக நபர்களாக பெயரிட்ட சிஐடி

0
188

நடிகை தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை பிரதான நீதிவான் திலின கமகேவிடம் தெரிவித்தது.

கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி 30 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் இருவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

அதேவேளை இருவருக்கும் எதிராக போதிய சாட்சியங்கள் இருந்தால் மாத்திரம் சந்தேக நபர்களாக பெயரிடுமாறு நீதிவான் பிறப்பித்த உத்தரவின் பிரகாரம், குற்றப் புலனாய்வு திணைக்களம், இவர்களைச் சந்தேக நபர்களாக பெயரிடப்படுமென நீதவானிடம் தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதால் தமிதா அபேரத்னவுக்கும் அவரது கணவருக்கும் தேவையான பிணையை வழங்குமாறு சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் கோரியிருந்த நிலையில் நீதிமன்றில் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.