25 கோடி ரூபாய் மோசடி! நடிகை கெளதமி பரபரப்பு புகார்

0
234

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் கெளதமி. குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ருத்ரா, பாபநாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கெளதமி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், ”17 வயது முதல் நடிகையாக நான் 25 கோடி ரூபாய் அளவிற்கு சம்பாதித்து சொத்து சேர்த்தேன்.

கடந்த 2004 ஆம் ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டபோது எனது மகளின் எதிர்காலத்திற்காக அனைத்து சொத்துக்களையும் விற்பனை செய்ய அழகப்பன் என்பவரை பவர் ஏஜெண்டாக நியமித்தேன்.

Actress Gowthami

எனக்கு சொந்தமான விவசாய நிலத்தை 4 கோடி ரூபாய்க்கு அழகப்பன் விற்பனை செய்து, எனக்கு வெறும் 62 லட்ச ரூபாய் மட்டுமே வங்கிக் கணக்கில் வரவு வைத்தார்.

மீதமுள்ள பணத்தை அழகப்பன் தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கில் மாற்றி கொண்டதோடு எனது 8 ஏக்கர் நிலத்தையும் அபகரித்ததாக” தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.