புதிய அமைச்சரவையில் 4 தமிழர்கள் இராஜாங்க அமைச்சர்கள்!

0
575

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர்.

இதற்கான பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.

அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன.

அவர்கள் விவரம் வருமாறு,

எஸ். வியாழேந்திரன் – வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர்

சிவநேசன்துரை சந்திரகாந்தன் – கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

அ. அரவிந்தகுமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்