தாய்லாந்தின் முன்னாள் ராணி காலமானார்

0
24

தாய்லாந்தின் முன்னாள் ராணி மற்றும் தற்போதைய மன்னர் மஹா வஜிரலொங்கோர்னின் தாயாருமான ராணி சிரிகிட் கிடியாகரா (Queen Sirikit Kitiyakara) தனது 93 வது வயதில் காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த இவர் வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24, 2025) உயிரிழந்ததாக தாய்லாந்து அரச குடும்பம் அறிவித்துள்ளது. இவரது கணவரும் தாய்லாந்தின் முன்னாள் மன்னருமான பூமிபோல் அதுல்யடிஜ் (King Bhumibol Adulyadej) கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார்.