திருமண நிகழ்வில் கூடிய முன்னாள் ஜனாதிபதிகள்; ஒரே மேசையில் மஹிந்தவும் ரணிலும்

0
59

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் மகளின் திருமண விழா சமீபத்தில் நடைபெற்றது. திருமண விழா நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

திருமண விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்க்ஷ, ரணில் விக்கிரமசிங்க, கோட்டபாய ராஜபக்க்ஷ ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

நீண்ட இடைவெளியின் பின்னர் பொது வெளியில் முன்னாள் ஜானாதிபதிகள் ஒன்றாக கூடிய நிகழ்வாக பிரசன்ன ரணதுங்கவின் மகளின் திருமண விழா அமைந்திருந்தது.