முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி கைது

0
24

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.   

சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் விசாரணைக்குட்படுத்தபட்டு வருகின்றார். அதனையடுத்து நெவில் வன்னியாராச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.