உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விடைகொடுக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த

0
63

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்றைய தினம் வெளியேறவுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் தவிர்ந்த ஏனைய சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சபாநாயகரினால் சான்றுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நீண்ட காலமாக குடியிருந்து வந்த விஜேராம இல்லத்தில் இருந்து இன்று வெளியேறவுள்ளார்.

அதனையடுத்து சிறிது காலம் வரை அவர் கொழும்பை விட்டும் வெளியில் வசிக்கும் விருப்பத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் அவர் தங்குவதற்கான சாத்தியங்களே பெருமளவில் காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.