பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அலி பேபிக்கு மரண தண்டனை!

0
129

அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவர் ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல, இந்த உத்தரவை புதன்கிழமை (16) பிறப்பித்தார். வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.