முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட வேண்டும்

0
19

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் சவேந்திர சில்வா போன்றோரை கைது செய்து விசாரணை மேற்கொள்வதனூடாக இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர வேண்டும் என அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பிராசா, தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பில் இன்றைய அரசு கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

இலங்கை பொலிஸாருடன் பேசத்தெரியாத அர்ச்சுனா எம்.பி தனது தவறுகளை உணர்ந்து தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் தமிழ் மக்களின் உறவுகளான மலையக தமிழரை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளையும் அர்ச்சுனா எம்.பி நிறுத்த வேண்டும்.

நீதி கேட்டு போராடும் தமிழினம் ஒற்றுமையை இழந்தால் தென்னிலங்கைக்கு கொண்டாட்டமாகவே இருக்கும் என்பதையும் அர்ச்சுனா விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தவகையில் முட்டாள் தனமாக அமைச்சர் சந்திரசேகரனை தாக்குவதை அர்ச்சுனா எம்.பி கைவிட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அத்துடன் கடந்தகால விடயங்களை கூறி அர்ச்சுனா எம்.பி மன்னார் விடயத்தில் சாக்குப் போக்கு காட்டி தப்பித்துக் கொள்ள முடியாது. இது எமது மக்களின் இருப்புக்கான போராட்டம். இதை முன்னெடுக்கும் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மன்னார் சென்று போராடத்தை வலுப்படுத்த வேண்டும்.

மேலும் இறுதி யுத்த காலப் பகுதியில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த போராளிகள், மக்கள் தொடர்பிலும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்த அரசு வெளிக்கொணர வேண்டும். மேலும் தமிழக கரூர் விடயத்தில் தமிழக அரசின் மீதே தவறுகள் இருக்கின்றன. குறிப்பாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் உருவாகியதால்தான் இந்த அனர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விஜய்யின் கட்சி உறுப்பினர்கள் தமது கூட்டத்துக்கு வரும் மக்களின் வரவை அறிந்து கோரிய இடத்தை கொடுக்க தமிழக பொலிஸார் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு விடயத்தை அநுர அரசு இருந்தாலும் அதை வலுவாக தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த கால அரசுகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் நட்பைப் பேணி வந்த நிலையில் தற்போதைய அரசு அதற்கு மாறாக நடவடிக்கை முன்னெடுக்கின்றது. இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.