இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

0
223

 2023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..

மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

175 மில்லியன் டொலர்கள் அதிகம்

இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் டொலர்கள் அதிகம் என்றும் 2022 மே மாதத்தில் இலங்கைக்கு 304.1 மில்லியன் டொலர் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது,

இலங்கைக்கு வருமானத்தை குவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் | Foreign Workers Who Generate Income For Sri Lanka

மேலும் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து  இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான மொத்தம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாகவும்  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

https://6310691c5cb0bcac1d2e82c8a8ce416e.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.html