தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு; மயங்கியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
156

இந்தியாவின் விழுப்புரம் மாவட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநாடு இன்று மாலை நடைபெற்ற போது மாநாட்டில் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இவர் தவிர மாநாட்டில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்த 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிகழ்வு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற குறித்த மாநாட்டுக்கு அதிகளவானோர் வருகை தந்திருந்தனர். இந்தநிலையில் மாநாடு நிறைவடைந்த பின்னர் பெரும் திரளானோர் ஒரே நேரத்தில் வெளியேற முற்பட்டதால் அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளது.